300 ஆண்டுகளுக்கு முந்தைய ஓலைச்சுவடிகள் சிக்கின

Sekar Tamil
பழனி:
கொடைக்கானல் அருகே பெரும்பள்ளம் கிராமத்தில் 300 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.


பழனி தொல்லியல் ஆய்வாளர் நந்திவர்மன், பழனியாண்டவர் கலை கல்லூரி வரலாற்று துறை தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கொடைக்கானல் அருகே பெரும்பள்ளத்தில் முகாமிட்டனர்.


இப்பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஆசைதம்பி என்பவர் கொடுத்த தகவலின் பேரில், அக்னி புத்திரனிடமிருந்து பழமையான ஓலைச் சுவடிகளை பெற்று ஆய்வு செய்தனர்.


இதில் 1713ம் ஆண்டு வாழ்ந்த பழனிமலை வாத்தியார் என்பவர் மனுநீதி சோழன் தன் மகனை தேர்க்காலில் இட்டு பசுவுக்கு நீதி வழங்கிய கதையை பாடலாக எழுதியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



Find Out More:

Related Articles: