சென்னை:
கூடுதல்ங்க... 10 சதவீதம் கூடுதல் என்று புள்ளி விபர கணக்கு தெரிவித்துள்ளது வானிலை மையம். எதற்காக தெரியுங்களா?
ஒரு பக்கம் சூரியன் வறுத்தெடுக்க... அவ்வபோது தென்றல் சாரலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இந்த மழை கனமழையாக பெய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்... 2016 ம் ஆண்டில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 10 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்றால் இதுவரை 152 மி.மீ., மழை பெய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாகும். கடந்த ஜீன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தமிழகத்தில் சராசரியாக 320 மி.மீ., மழை பெய்ய வேண்டும். அதற்கு இன்னும் 50 நாட்கள் உள்ளன.
இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த வானிலை 5 நாட்களுக்கு நிலவும் என்று தெரிவித்துள்ளார். பெய்யுங்கள் வருண பகவானே... பெய்யுங்கள்.. பூமியை குளிர செய்யுங்கள்...