11 வயசுலேயே இப்படி... பஸ்சை திருடி ஓட்டிய சிறுவன்...

frame 11 வயசுலேயே இப்படி... பஸ்சை திருடி ஓட்டிய சிறுவன்...

Sekar Tamil
பெர்லின்:
அட இந்த வயசுலேயே  இப்படி ஒரு குசும்பனாடா நீ என்று ஜெர்மனியில் மக்களை அச்சமடைய செய்துள்ளான் 11 வயது சிறுவன்.


என்ன செய்தான் தெரியுங்களா? ஜெர்மனியில் ரோட்டோரம் நின்றிருந்த பஸ்சை திருடி ஓட்டிய 11 வயது சிறுவனால் பயணிகள் பீதிக்குள்ளாகினர். 


ஜெர்மனியில் உள்ள இங்கோல்ஸ்டேட் நகரில் நடந்து சென்ற 11 வயது சிறுவன் கண்ணில் ஒரு பஸ் சாவியுடன் நின்று கொண்டிருந்தது பட்டது. சட்டென்று அவன் புத்தியில் ஒரு கீறல் விழுந்தது. அந்த பஸ்சை ஓட்டிப் பார்க்க விரும்பினான் அவன்.


அப்புறம் என்ன நினைத்ததை சாதித்தான்... பஸ்சை திருடினான். அதுமட்டுமா... வழியில் பஸ்சுக்காக காத்திருந்த 3 பயணிகளையும் ஏற்றிக் கொண்டான் பாருங்க... அதுதான் ஹைலைட். இருந்தாலும் பஸ் அவன் பேச்சை கேட்கவில்லை. தாறுமாறாக அவன் பஸ்சை ஓட்டியதால் பயணிகள் போலீசுக்கு தகவல் கொடுக்க... வழிமறித்த போலீசார் அந்த பஸ்சிலிருந்து அவனை இறக்கி... வீட்டுக்கு அழைத்துச் சென்று தாயாரிடம் ஒப்படைத்தனர்.


யாருக்கும் காயம் எதுவும் இல்ல... ஆனால் அந்த பஸ்தான் பாவம்... ஆங்காங்கே... அப்பளம் போல் நசுங்கிவிட்டது.



Find Out More:

Related Articles:

Unable to Load More