மும்பை:
ஒரே நாளில் மும்பை மக்களை முடக்கி போட்டு விட்டது மழை என்றால் மிகையில்லை.
மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. திரும்பிய திசையெங்கும் வெள்ளக்காடாக உள்ளது. ஒரே நாள் மழைக்கே மும்பை தத்தளித்து போய் கிடக்கிறது.
மும்பை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி வந்த நிலையில் நேற்று மதியம் வரை இடைவிடாமல் மழை வெளுத்த வெளுப்பில் சாலைகள் மூழ்க எங்கு திரும்பினாலும் தண்ணீர்... தண்ணீர்தான். இதனால் மக்கள் கண்ணீர் விட்டு கதறாத குறைதான்.
மும்பை நகரை மழை வெள்ள நீர் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. மேற்கு விரைவு சாலையில் வாகனங்கள் நெடுந்தொலைவுக்கு அணிவகுத்து நின்றன.
உள்நாட்டு, பன்னாட்டு விமானங்களும் தாமதமாக இயக்கப்பட்டது.
ஒரே நாளில் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.