நாங்க இருக்கோம்... காண்டாமிருக குட்டிகளுக்கு ஆதரவு

Sekar Tamil
கவுஹாத்தி:
நான்... இல்ல நான்.. என்று ஆர்வம் காட்டி என போட்டி போடுகின்றனர் பலரும். எதற்காக தெரியுங்களா?


வட கிழக்கு மாநிலமான அசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், அனாதையான காண்டாமிருகங்களின் குட்டிகளை தத்தெடுக்கத்தான் இந்த போட்டா போட்டி நடக்கிறது.


அசாமில் உள்ளது கஜிரங்கா தேசிய உயிரியல் பூங்கா. உலகின் மூன்றில் இரண்டு பங்கு ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் இங்குதான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் இந்த மாநிலத்தில் பெய்த கனமழையால் மக்கள் மட்டுமின்றி இந்த பூங்காவில் இருந்த விலங்குகளும் பாதிக்கப்பட்டன. 


பூங்காவை சுற்றி வளைத்த வெள்ளத்தில் சிக்கி காண்டாமிருகங்கள் பல உயிரிழந்தன. இதில் பெரிய சோகம் சில குட்டிகள் தாயைப் பிரிய நேர்ந்ததுதான். அனாதையாக இருந்த 8 குட்டிகளை, வன உயிர் மறுவாழ்வு மற்றும் பராமரிப்பு மையம் பராமரித்து வருகிறது.


இக்குட்டிகளுக்கு, தினமும் 3.25 கிலோ பால்பவுடர் உணவாக தரப்படுகிறது. இந்த 8 குட்டிகளுக்கும் பால் அளிக்க தினமும் 45 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. இங்குதான் ஒரு ஆனந்த திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த காண்டாமிருக குட்டிகளை தத்தெடுக்க பலரும் போட்டி போட்டு முன்வந்துள்ளனர்.


மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த டாக்டர் நந்தினி சர்மா, பிரபல அசாம் பாடகர் ஜீபேன் கார்க் ஆகியோர் தலா, ஒரு குட்டியைத் தத்தெடுத்துள்ளனர். மேலும் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இந்த குட்டிகளை எப்படி பராமரிப்பது என்ற பூங்கா நிர்வாகிகளின் கவலை தற்போது தீர்ந்துள்ளது.


Find Out More:

Related Articles: