புதுடில்லி:
அப்பாடா... ஒருவழியாக பல தடைகளை தாண்டி ஜி.எஸ்.டி. மசோதாவை நிறைவேற்றிவிட்டாங்க... நிறைவேற்றி விட்டாங்க...
பல்வேறு தடைகளைக் கடந்து திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. மசோதா நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு திமுகவின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.
மசோதாவில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து நிதி மந்திரி அருண் ஜெட்லி பேசுகையில், ஜி.எஸ்.டி மசோதாவால் மத்திய, மாநில அரசுகளின் வருவாய் பெருகும். இந்த மசோதாவால் மத்திய அரசை விட மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும். வரி ஏய்ப்புகள் குறையும் என்று தெரிவித்தார்.
இந்த மசோதாவுக்கு தி.மு.க. ஆதரவு அளித்தது. அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து தாங்கள் கூறிய திருத்தங்களை சேர்க்காததால் வெளிநடப்பு செய்தது.
பின்னர் ஜி.எஸ்.டி. மசோதா மீது நடந்த வாக்கெடுப்பில் தி.மு.க. உறுப்பினர்கள் உள்ளிட்ட 197 உறுப்பினர்களும் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் எதிர்ப்பின்றி மசோதா நிறைவேறியது.