யோகா.. மையம் இல்ல... வசிய மையம்... பரபரப்பு குற்றச்சாட்டு

Sekar Tamil
சென்னை:
வசியம்... 5000 குழந்தைகளை கோமாவில் தள்ளி கிட்னி திருடப்போகிறார்கள் என்ற புகாரில் பெரிய அணுகுண்டையே பற்ற வைத்துள்ளார் ஒரு பெண். இந்த அதிர்ச்சி தகவலின் பெரிய பின்னணி என்னவென்று பார்ப்போம்.


ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம்தான் அந்த பெண் கூறிய புகார் இடமாக உள்ளது. என்ன புகார் என்றால் போதைப் பொருள், வசிய மருந்து இவற்றை பயன்படுத்தி 5,000 குழந்தைகளை கோமா நிலைக்கு தள்ளி கிட்னி திருடப் போகிறார்கள் என்று அந்த மையத்தில் சிக்கிய 2 இளம்பெண்களின் தாய் சத்யஜோதி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். இதுதான் தற்போது பற்றி எரிகிறது.


கோவையைச் சேர்ந்தவர் பேராசிரியர் காமராஜ். இவரது 2 மகள்கள் பி.டெக், எம்.டெக் முடித்தவர்கள். இருவரும் ஈஷா யோகா மையத்தில் அடிமைகளாக இருப்பதாக கலெக்டரிடம் பேராசிரியர் காமராஜீம் அவரது மனைவி சத்யஜோதியும் புகார் கூறியிருந்தனர்.


அதற்கு பின்னர் தான் மேற்சொன்ன அதிரடி அணுகுண்டை பற்றவைத்தார் சத்யஜோதி. அவர் கூறியதாவது: என் மகள்களைப் பார்க்க வாரம் ஒருமுறை ஈஷா யோகா மையத்துக்கு செல்வது வழக்கம். என் சின்ன மகள் என்னைப் பார்க்க வருவது இல்லை.


எங்களிடம் வந்தால் நரகமாம். நீங்கள் மொட்டையடித்துவிட்டால் அம்மா, அப்பா கல்யாணம் செய்ய வற்புறுத்தமாட்டார்கள் எனக் கட்டாயப்படுத்தி மொட்டையடித்துவிட்டார்கள். என் மகள் 40 பவுன் கொண்டு போயிருந்தாள். அதை அப்படியே ஈஷா யோகா மையத்தில் கொடுத்துவிட்டு சாமியார்களாகிவிட்டார்கள் என் 2 மகள்களும்.


ஈஷா யோகா மையத்தில் காலை 7 மணிக்குள்ளும் இரவு 7 மணிக்குள்ளும் சாப்பிட்டாக வேண்டும். மொட்டையடித்தவர்களுக்கு தனியே ஒரு சாப்பாடு. மற்றவர்களுக்கு வசிய சாப்பாடு தனியாக கொடுக்கிறார்கள். ஈஷா யோகா மையத்தில் 5,000 குழந்தைகளுக்கான காப்பகம் உள்ளது. அந்த 5,000 குழந்தைகளைக் காப்பாற்றியாக வேண்டும்.


அங்கு கிட்னி திருடி விற்பனை செய்வது சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. ஈஷா யோகா மையத்தில் பயன்படுத்தப்படும் ஊதுபத்தியில் போதைப் பொருள் கலந்திருக்கிறது. தலையில் தேய்க்கும் எண்ணெய் உட்பட அவர்கள் தரும் பொருட்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.


என் மகள்கள் வெளியே வந்துவிட்டால் ஈஷா யோகா மையம் தொடர்பான அனைத்து உண்மைகளும் வந்துவிடும். ஆனால் அவர்களை விட மறுக்கிறது ஈஷா யோகா மையம். இவ்வாறு சத்யஜோதி பரபரப்பை கிளப்பி உள்ளார். இதெல்லாம் உண்மையா என்பது குறித்து அரசுதான் விரிவான விசாரணையை நடத்த வேண்டும் என்கின்றனர். சிக்கலில் சிக்கி உள்ளதா ஈஷா யோகா மையம்?



Find Out More:

Related Articles: