முதல் முறை... முதல் முறை என்ற டோக்கியோவே பெருமிதப்படுகிறது. எதற்காக தெரியுங்களா?

frame முதல் முறை... முதல் முறை என்ற டோக்கியோவே பெருமிதப்படுகிறது. எதற்காக தெரியுங்களா?

Sekar Tamil
ஜப்பானில் டோக்கியோ கவர்னராக முதன்முறையாக பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் இந்த பெருமிதத்திற்கு காரணம். டோக்கியோ நகரில் கவர்னராக இருந்த யோய்சி மசூசோ ஊழல் புகாரால் தன் பதவியை இழந்தார. இதையடுத்து புதிய கவர்னரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடந்தது.


இங்குதான் ஒரு வரலாற்று பதிவு ஏற்பட்டுள்ளது. என்ன தெரியுங்களா? யுரிகோ கோய்கி (64) என்ற பெண் முதன்முறையாக கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


இவர் பிரதமர் ஷின்ஷோ அபேயின் லிபரல் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர். ஷின் ஷோ அபே அரசில் ராணுவ மந்திரி ஆக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சி சார்பின்றி சுயேட்சையாக போட்டியிட்டார். இவருக்கு 29 லட்சம் ஓட்டுகள் கிடைத்து அமோக வெற்றி பெற்றுள்ளார். இதற்காக மகிழ்ந்து அடைந்துள்ள அவர், முன்பு நடைபெற்ற நிகழ்வுகள் எதுவும் ஏற்படாத வகையில் டோக்கியோவை வழிநடத்துவேன் என்று தெரிவித்துள்ளார். 


Find Out More:

Related Articles:

Unable to Load More