மும்பை:
நின்னுக்கிட்டு இருக்கும் போது செய்தா... தலையோடு சேர்த்து அடிச்சு இறக்கிடுவாங்க... நடுவானில் செய்தால் வேறு என்ன செய்ய முடியும்... கீழேதான் விமானத்தை இறக்கணும். அதுதாங்க நடந்திருக்கு.
துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி இண்டிகோ விமானம் பறந்துச்சுங்க. இந்தியாவை நெருங்கியபோது ஒரு பயணி தன் சலம்பலை ஆரம்பித்தார். விமான ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் உணவுப் பொருட்கள் வைக்கும் தள்ளுவண்டியில் ஏறி உட்கார்ந்தார்.
இப்படியே இவரது ரகளை அதிகரித்தது. இதை தட்டிக்கேட்ட சக பயணியிடம் இவர் கைகலப்பில் ஈடுபட்ட தகவல் விமானிக்கு பறக்க அவர் மும்பை விமான நிலையத்தை தொடர்பு கொண்டு தாங்க முடியலை... இங்க ஒரு பயணியோடு அலப்பறை தாங்க முடியலை என்று நொந்து கொள்ள கீழே இறங்குங்க என்று அவர்கள் அனுமதி தந்தனர்.
உடன் அந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அப்புறம் என்ன அந்த ரகளை பார்ட்டி மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
விமானத்தில் பிரச்சனை செய்த பயணி, ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக முழக்கமிட்டதாக தகவல் பரபரக்க இதை அதிகாரிகள் மறுத்துள்ளனர். இந்த சம்பவம் மற்ற பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை கிளப்பி விட்டது.