ராணுவ ஹெலிகாப்டரை சுட்டுத் தள்ளிய தீவிரவாதிகள்

Sekar Tamil
பாரிஸ்:
தீவிரவாதிகளின் வெறிச்செயலுக்கு இந்த உலகம் என்று முற்றுப்புள்ளி வைக்கப்போகிறதோ தெரியவில்லை. தொடர்ந்து பல நாடுகளில் நடத்தப்படும் தாக்குதல்கள் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி வருகிறது. விஷயம் இதுதான்.


லிபியாவில் பிரான்சு ராணுவ ஹெலிகாப்டரை தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியதில் 3 வீரர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


லிபியா நாட்டில் அதிபராக இருந்த முகமது கடாபி ஆட்சி புரட்சிக்காரர்களால் தூக்கி எறியப்பட்டது. பின்னர் புதிய ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆட்சிக்கு உதவியாக நேட்டோ படைகள் அங்கு முகாமிட்டுள்ளன.


இதில் பிரான்சு நாட்டு உளவு படையினரும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படையை சேர்ந்தவர்கள் ராணுவ ஹெலிகாப்டரில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது தான் அந்த விபரீத சம்பவம் நடந்தது. இந்த ஹெலிகாப்டரை பார்த்த தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டுத்தள்ள தீப்பற்றி வெடித்து சிதறி கீழே விழுந்தது. இந்த எதிர்பாராத தாக்குதலில் 3 வீரர்கள் பலியாயினர். 


லிபியா நாட்டில் ஐ.எஸ். ஆதரவு கொண்ட தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவர்கள்தான் இந்த ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இந்த சம்பவத்தை பிரான்ஸ் அதிபர் உறுதி செய்துள்ளார்.


இப்படியே தீவிரவாதம் தன் ஆக்டோபஸ் கரங்களை உலகை வளைக்கும் முன்னர் இதன் ஆணிவேரை அடியோடு அழிக்க வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம்.


Find Out More:

Related Articles: