உலக வரலாற்றில் "வெயிலால்" இடம் பிடித்தது துபாய்...

Sekar Tamil
குவைத்:
முதல்முறை... முதல் முறை... உலக வரலாற்றிலேயே முதல் முறை என்று பதிவாகியுள்ளது இந்த விஷயம். என்ன தெரியுங்களா?


குவைத்தில் அதிகபட்சமாக 54 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியுள்ளது. இது உலக வரலாற்றிலேயே முதல் முறை என்பதுதான் மிகப்பெரிய விஷயம். 


வெயில் காலம் வந்தால் அதுவும் கத்திரி வெயில் காலம் வந்தால் நாமெல்லாம் ஈரதுண்டுடன் தான் அலைய வேண்டும். அந்தளவிற்கு வெயில் நம்மளை வாட்டி எடுத்து விடும். இந்த ஆண்டு தமிழகத்தின் பல பகுதிகளிலும் சூரியன் கிரிக்கெட் வீரர் போல சென்ச்சுரி அடித்து மக்களை கிளீன் போல்ட்டாக்கியது குறிப்பிடத்தக்கது. 


உலக வரலாற்றிலேயே குவைத்தில் அதிகபட்சமாக கடந்த வியாழக்கிழமை 54 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதாவது 129.3பஹ்ரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தி எடுத்துள்ளது. அப்ப குவைத்தையே ஏ.சி. பண்ணிடுவாங்க போங்க... 


குவைத்தில் உள்ள மித்ரிபா பகுதியில் தான் இப்படி வெயில் போடு போடுன்னு போட்டு தள்ளியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.


கடந்த 1913ம் ஆண்டு ஜூலை மாதம் 10ம் தேதி அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் வெயிலின் அளவு 56.7 டிகிரி செல்சியசாக பதிவாகியிருந்தது. ஆனால் இந்த பதிவில் ஏதோ பிரச்னை சரியில்லாத பதிவு என்று கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


Find Out More:

Related Articles: