சொத்து தகராறு... மருமகள் வெறியாட்டம் கரும்பு தோட்டத்தில் மாமியார் அடித்துகொலை

frame சொத்து தகராறு... மருமகள் வெறியாட்டம் கரும்பு தோட்டத்தில் மாமியார் அடித்துகொலை

Sekar Chandra
சிவகங்கை:
சொத்து தகராறில் தன் உறவினர்களுடன் சேர்ந்து மருமகளே தன் மாமியாரை கரும்பு தோட்டத்தில் வைத்து அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியை சேர்ந்தவர் பாக்கியம். இவர் தனது சொத்துக்களை தனது 2 மகன்கள் மற்றும் மகளுக்கு பிரித்து கொடுத்துவிட்டார். தனக்கென்று கிடைத்த பங்கு நிலத்தில் கரும்பு பயிரிட்டு வந்துள்ளார்.


இந்நிலையில் பாக்கியத்துக்கும் அவரது மருமகள் ரேணுவுக்கும் சொத்து விவகாரத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தகராறு முற்றிய நிலையில் தனது உறவினர்களுடன் சேர்ந்து தனது மாமியாரை கரும்புத்தோட்டத்தில் வைத்து அடித்து கொலை செய்துவிட்டராம்.
இதுகுறித்து பாக்கியத்தின் மகள் திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Find Out More:

Related Articles:

Unable to Load More