உத்தரகாண்ட்:
2 நாட்கள் மண்ணில் புதைந்து கிடந்த பெண்ணை மீட்புப்படையினர் மிகுந்த சிரமத்திற்கு இடையில் உயிருடன் மீட்டு சிகிச்சைக்கா ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மண்ணுக்குள் புதைந்த பெண் ஒருவரை 2 நாள் கழித்து உயிருடன் மீட்கப்பட்டார்.
இது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால் கனமழை பெய்தது. அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி ஓடுகிறது. நிலச்சரிவும் ஏற்பட்டதில் பலியானவர்களின் எண்ணிக்கை 18 என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில்தான் மண்ணில் புதைந்து கிடந்த பெண்ணை உயிருடன் மீட்டுள்ளனர். இந்த செய்தி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.