சட்டக்கல்லூரி மாணவி கொலை வழக்கில் சாட்சியம் சேகரிக்க காஞ்சிபுரம் வந்த கேரளா போலீசார்

frame சட்டக்கல்லூரி மாணவி கொலை வழக்கில் சாட்சியம் சேகரிக்க காஞ்சிபுரம் வந்த கேரளா போலீசார்

Sekar Chandra
காஞ்சிபுரம்:
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கேரள சட்டக்கல்லுாரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் சாட்சியங்களை சேகரிக்க குற்றவாளியுடன் காஞ்சிபுரம் வந்தனர் கேரளா போலீசார்.


கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே பெரும்பாவூரைச் சேர்ந்த சட்டக் கல்லுாரி மாணவி ஜிஷா (30). இவர் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போதுதான் அவருக்கு கொடூரமான சம்பவம் நடந்தது. ஜிஷா இதயமே இல்லாத ஒரு கொடூர மிருகத்தால் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.


இதுகுறித்து பெரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரிக்க அதிர்ச்சிமேல் அதிர்ச்சிதான் கிடைத்தது. இந்த கொலையுடன் தொடர்புடைய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அமீர் உல் இஸ்லாம் (24) சிக்கினான். இவன் காஞ்சிபுரம் மாவட்டம், சிங்காடிவாக்கம் பகுதியில் தங்கி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தபோது, கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டான்.


பின்னர் கேரளாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அமீர் உல் இஸ்லாம், கேரளாவில் தங்கியிருந்த இடங்களை போலீசாரிடம் தெரிவித்தான். அதுபோல காஞ்சிபுரம் மாவட்டத்தில் அவன் தங்கியிருந்த இடத்தை காட்ட, அவனை அழைத்துக்கொண்டு, கேரள போலீசார் வந்தனர். 
காஞ்சிபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கம் வந்த கேரள போலீசார், சில தடயங்களை சேகரித்து கேரளா திரும்பினர். காஞ்சிபுரம் மக்கள் அந்த காமக்கொடூரனை பார்த்து வசைபாடினர்.



Find Out More:

Related Articles:

Unable to Load More