பெங்களூர்:
பெருமையாக இருந்தவர் பொறுமையாக இல்லாமல் போய்விட்டாரே என்று மக்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளார்கள். காரணம்...இதுதான்.
பெங்களூருக்கு பல பெருமைகள் இருந்தாலும் முக்கியமான பெருமையா... பெண்களுக்கு நம்பிக்கையாக இருந்தவர் டாக்சி டிரைவர் பாரதி (40). பெங்களூருவின் முதல் பெண் டாக்சி டிரைவர்.
பாரதியின் பெயரை கொண்டவர் செய்து கொண்ட செயல்தான் மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. பாரதி ஓட்டிய டாக்சியின் ஓனர் அவரை காணாததால் அவரது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போதுதான் அதிர்ச்சியின் உச்சத்தை அடைந்தார்.
பாரதி அவரது வீட்டில் கதவு பூட்டப்படாத அறையில் தூக்கில் பிணமாக தொங்கியதுதான் காரணம். பிறகென்ன போலீசுக்கு தகவல் பறக்க போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர் தற்கொலைக்கு என்ன காரணம் என்றுதான் தெரியாத நிலை நீடிக்கிறது.
பாரதி தற்கொலை செய்து கொண்ட அறை பூட்டப்படாமல் இருக்கமாக மூடப்பட்டு இருந்துதான் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.