கிளியே... கிளியே.. சாட்சி சொன்ன கிளி...  கிலியில் உறைந்த அமெரிக்காவின் "கிளின்னா"

frame கிளியே... கிளியே.. சாட்சி சொன்ன கிளி... கிலியில் உறைந்த அமெரிக்காவின் "கிளின்னா"

Sekar Chandra
அமெரிக்கா:
கிளியே... கிளியே... சாட்சி சொல்லுக்கிளியே என்று ஒரு கொலை வழக்கில் கிளி ஒன்று சாட்சியாக மாறிய ஆச்சரிய சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. 


 
அமெரிக்காவின் மிசிகனை சேர்ந்தவர் மார்டின். இவரது மனைவி கிளின்னா. இவர்களுக்கு இடையில் தகராறு நடந்தது. இதில் டென்ஷனான கிளின்னா துப்பாக்கியை எடுத்து மார்டினை 5 முறை சுட்டுத்தள்ளினார். இதில் மார்டின் பலியாகவே... அதிர்ச்சியில் உறைந்து போன கிளின்னா தானும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். ஆனால் துப்பாக்கி வெடிக்கவில்லை. ட்ரபிள் செய்ய அவர் உயிர் தப்பினார். 


இந்த கொலை வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில்நே என்ன பிரச்னை என்றால் கொலையை பார்த்த சாட்சி யாரும் இல்லாததால் கிளின்னா மனதிற்குள் சந்தோஷப்பட அதற்கு "ஆப்பு" வைத்தது இந்த தம்பதி வளர்த்த கிளி...


அந்த கிளி தெளிவாக பேசும் திறன் கொண்டது. கிளின்னா தன் கணவரை சுடும் போது அந்த கிளி மட்டும்தான் இருந்துள்ளது.  இதையடுத்து அந்த கிளியை லைக்கு சாட்சியாக பயன்படுத்த முடிவு போலீசார் முயற்சிகள் மேற்கொண்டனர். 


அப்புறம் என்ன கிளியை வழக்கில் ஒரு சாட்சியாக நீதிபதியும் ஏற்க கிளி கொலை நடந்த போது மார்டின் அவரது மனைவியிடம் என்னை சுடாதே என்று கூறிய வார்த்தையை கூற அப்புறம் என்ன கிளின்னாவிற்கு சிறை உறுதியாகி உள்ளது. வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதை இங்கு உல்டாவாகி விட்டது. கிளியால் கிலி அடைந்துள்ளார் கிளின்னா... இதுதான் சிறுதுறும்பும் பல்குத்த உதவும் என்பதோ!


Find Out More:

Related Articles:

Unable to Load More