ஆசிரியர் படுகொலை... அதிர்ச்சியில் பரமகுடி மக்கள்...

Sekar Chandra
பரமக்குடி:
என்ன காரணம்... ஏன் இந்த வெறித்தனம் என்று மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். காரணம் என்ன தெரியுங்களா?


பரமக்குடி அருகே பள்ளி ஆசிரியர் ஒருவர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டதுதான் இந்த அதிர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது. 


ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே சத்திரக்குடியில் உள்ள  அரசுப் பள்ளியில் ராஜ்குமார் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவரை அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர். யார் அவர்கள்? எதற்காக இந்த வெறிச்செயல் என்று தெரியாத நிலை உள்ளது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றினர். 


வெறிப்பிடித்தவர்கள் செய்த இந்த படுகொலை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. முன் பகையா? குடும்ப பிரச்னையா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று போலீசார் விசாரிக்கின்றனர்.


Find Out More:

Related Articles: