முகம் தெரியாத பெண்ணிற்கு ரூ.10 லட்சம்... பெற்றோர் கிடுக்கிப்பிடியால் வாலிபர் தற்கொலை

Sekar Chandra
நகரி:
நீங்க நல்லவரா... இல்ல கெட்டவரா... நாயகன் பட டயலாக் எந்த காலத்திலும் எதற்கும் பொருந்தும் போல. இப்போது இந்த டயலாக் சமூக வலைதளங்களை பார்த்து கேட்க வேண்டும் போல் இருக்கு. ஆரம்பத்தில் அருமையாக போய்க்கிட்டு இருந்த சமூக வலைதளங்கள் தற்போது ஏமாற்றுபவர்களின் கூடாரமாக மாறிவிட்டது. அப்படிப்பட்ட அதிர்ச்சி சம்பவம்தான் இது.


"பேஸ்புக்கில்" பழகிய பெண்ணிடம் ரூ.10 லட்சம் ஏமாந்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொள்ள தற்போது ஆந்திரபிரதேசமே அரண்டு போய் கிடக்கிறது. 


ஆந்திர மாநிலம் கடப்பா, காதிப்பேட்டை பஸ்ஸ்டாண்டில் டீக்கடை வைத்திருந்தவர் ரமேஷ் (33). இவருக்கு பேஸ்புக்கில் சாட்டிங் செய்வது பிடித்தமான ஒன்றாம். இந்த சாட்டிங்கின் போது விசாகப்பட்டினத்தை சேர்ந்த பெண் அறிமுகம் ஆகி உள்ளார். பேஸ்புக்கில் இருந்து செல்போனுக்கு இடமாறிய இருவரும் பேசினார்கள்.. பேசினார்கள்... அப்படி பேசியுள்ளார்கள். 


இதில் ரமேஷ் அந்த பெண்ணின் பேச்சில் மயங்கியே விட்டார். நாளும் நட்சத்திரமும் பார்த்து அந்த பெண் தான் கஷ்டத்தில் இருப்பதாக சொல்ல முகம் கூட பார்க்காத அந்த பெண்ணுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் வரை வங்கியில் பணம் போட்டுள்ளார் ரமேஷ்.
இதுபற்றி யாரோ பற்ற வைத்ததில் ரமேசின் பெற்றோருக்கு அதிர்ச்சி அவரிடம் விசாரிக்க, கண்டிக்க, முட்டல்மோதல்தான். உடனே பணத்தை வாங்கு என்று பெற்றோர் பிடிவாதமாக இருக்க வேறு வழியின்றி அந்த பெண்ணுக்கு போன் செய்து பணத்தை திருப்பி  கேட்டபோதுதான் ரமேசுக்கு இதயத்தில் இடியே விழுந்துள்ளது. 


நான்தா பணமே வாங்கவில்லை என்று ஒரே போடாக போட்ட அந்த பெண் பின்னர் போனையே எடுக்கவில்லையாம். இதனால் விரக்தியடைந்த ரமேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது அது விசாகப்பட்டினம் சீத்தம்பேட்டையைச் சேர்ந்த கல்யாணி என்ற பெண்ணுடையது என்பது தெரியவந்தது. இப்போ போலீசார் விசாகப்பட்டினத்தில் விசாரிக்கிறாங்க. இனி என்ன செய்து என்ன ஆகப்போகிறது ஒரு உயிர் பறிபோய்விட்டது அல்லவா?


Find Out More:

Related Articles: