வெங்காயம் விலை குறைந்த நேரத்தில் நானும் உங்கக்கூட கூட்டணி போடுறேன்னு துணைக்கு வந்து இருக்கு கேரட்

Sekar Chandra
தக்காளி காட்டு காட்டுன்னு காட்டி விர்ன்னு விலையில் சதமடித்ததால் மக்களின் நிலைதான் பரிதாபத்திற்கு உள்ளானது. ஓட்டல்களில் தக்காளி சட்னிக்கு ஆப்பு விழுந்தது. ஏறும்போது வேகமாக ஏறி இறங்கும்போது ஆமை வேகத்தில் இறங்கியதுதான் வேதனை.


இந்நிலையில் விளைச்சல் அமோகம் காட்டியதால் தமிழகத்தில் கேரட் விலை சரியத் துவங்கி உள்ளது. நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சாகுபடி ஆகும் கேரட்தான் பிற பகுதிகளுக்கு வந்துட்டேன்..னு போய் குதிக்கும். 


கர்நாடகாவில் இருந்தும் தமிழகத்திற்கு கேரட் வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் ஏப்ரல் மாத விளைச்சல் சரியில்லாத நிலையில் இங்கிருந்து தமிழகத்தில் இருந்து அனுப்பும் நிலை. இது எப்படி இருக்கு.. வாங்கினது போய்... கொடுக்கிறது நிலைமை.


அங்கதான் நினைச்சா கேரளாவும் எங்களுக்கும் வேணும்னு கேட்க அப்புறம் என்ன நமக்கு கேரட் விலை எகிறோ எகிறுன்னு எகிறியது. ஒரு கிலோ கேரட் 60 ரூபாய் போய் உட்கார்ந்து நமக்கு "பழிப்பு" காட்டியது. 


இப்போ நிலைமை தலைகீழாகிவிட்டது. நம்ம ஊருல மட்டுமின்றி கர்நாடகாவிலும் இந்த சிவப்பு தங்கம் விளைச்சலில் அமோகம் காட்ட வரத்தும் அதிகரித்தது. அப்புறம் என்ன கிலோ 20 ரூபாய்க்கு வந்து விட்டது. ஏற்கனவே வெங்காய விலை குறைந்த நிலையில் தற்போது கேரட்டும் கூட்டணி போட்டு இருக்கு.  இது மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.


Find Out More:

Related Articles: