லண்டன்:
பெண்ணை பூவுக்கு ஒப்பிடுவர்... ஆனால் பிரிட்டனில் கத்தியால் குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் பெண் எம்பியை கொலை செய்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பிரிட்டனின் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவர் ஜோ காகஸ் (41). பெண் எம்.பி., இவர் பேட்லி மற்றும் ஸ்பென் ஆகிய பகுதிகளின் எம்.பி.,யாக உள்ளார். தனது தொகுதிக்கு உள்பட்ட பிரிஸ்டால் பகுதியில் இவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போதுதான் யாரும் எதிர்பாராத அதிர்ச்சியான சம்பவம் நடந்தேறியது. ஜோ காகஸ் எதிரே வந்த நபர், அவரை கத்தியால் சரமாரியாக குத்தினார். மேலும் துப்பாக்கியால் சுடடும் தப்பியோடினான்.
படுகாயம் அடைந்த ஜோ காக்ஸ் அங்கேயே மயங்கி விழுந்தார். உடன் சென்ற மற்றொரு நபரும் தாக்குதலில் காயமடைந்தார். சம்பவம் அறிந்த போலீசார், ஜோ காக்ஸை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
ரத்தம் அதிகம் வெளியேறியதால், சிகிச்சை பலனின்றி ஜோ காக்ஸ் இறந்தார். இது தொடர்பாக 52 வயதான அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஒரு மலர் மடிந்தது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.