உறுதி செய்த காஜல்!

நடிகை காஜல் அகர்வால் கடைசியாக தமிழில் தல அஜித் ஜோடியாக நடித்த விவேகம் படம் தான் ஹிட். இதன் பின்னர் இவர் நடித்த படமான மெர்சல் படம் படு தோல்வி அடைந்தது. இதனை அடுத்ததாக குயின் படத்தின் தமிழ் றெமெக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார்.


இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்ததாக இவர் சில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அவ்வாறு அடுத்ததாக இவர் நடிப்பில் வெளியாக உள்ள தெலுங்கு படமான கவசம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடந்தது.



அதில் காஜல் அகர்வால் அடுத்ததாக அவர் உலக நாயகன் கமல் ஹாசன் ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்ட படமான இந்தியன் டூ படத்தில் நடிக்க உள்ளதை அவரே கூறி உறுதி செய்தார். 


Find Out More:

Related Articles: