சிக்கலில் த்ரிஷாவின் படம்

SIBY HERALD
இடுப்பழகி த்ரிஷா நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய படம் சதுரங்க வேட்டை டூ. இந்த படத்தை சலீம் படத்தை விஜய் ஆண்டனியை வைத்து இயக்கிய நிர்மல் குமார் இயக்க சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார். இந்த படத்தில் த்ரிஷா நடிகர் அரவிந்த் ஸ்வாமியின் ஜோடியாக நடித்துள்ளார்.



சதுரங்க வேட்டை டூ படம் சென்ற ஆண்டே வெளியாக வேண்டியது. ஆனால் ஆகவில்லை. கடைசியில் இந்த மாதம் வெளியாகும் என்று அறிவித்தனர். ஆனால் செப்டம்பரில் வெளியாகாது போல. நடிகர் அரவிந்த் சாமி தனது சம்பள பாக்கியை கொடுத்தால் தான் படம் வெளியாக வேண்டும் என்று கோர்ட்டில் கேஸ் போட்டு விட்டதால் சதுரங்க வேட்டை டூ வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



சதுரங்க வேட்டை டூ படத்தை காமெடி நடிகர் மனோபாலா தயாரித்துள்ளார். த்ரிஷாவின் அடுத்த படமாக விஜய் சேதுபதி ஜோடியாக நடித்துள்ள தொண்ணூற்றி ஆறு படம் ஆக்டொபர் நான்காம் தேதி வெளியாக உள்ளது. 


Find Out More:

Related Articles: