பார்ட்டி வருமா வராதா

SIBY HERALD
நடிகை நிவேதா பெத்துராஜ் கடைசியாக நடித்து வெளியான படம் டிக் டிக் டிக். ஜெயம் ரவியுடன் அவர் நடித்த இந்த படத்தில் விண்வெளி வீராங்கனையாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அவர் திமிரு புடிச்சவன் படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாகவும் வான் படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாகவும் நடித்து வருகிறார்.


இந்நிலையில் இவர் பல நாட்களுக்கு முன்னரே நடித்து முடித்த படம் ஒன்று இன்னும் வெளியாகாமல் உள்ளது. அது வேறு ஏதும் இல்லை வெங்கட் பிரபுவின் எட்டாவது படமான பார்ட்டி படம் தான். இந்த படத்தில் கயல் சந்திரன் ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இந்த படத்தில் ரொம்பவே மெனக்கெட்டு நிவேதா பெத்துராஜ் ரெஜினா மற்றும் சஞ்சிதாவுக்கு போத்தியாக கவர்ச்சி தாண்டவம் ஆடியுள்ளார்.


பிஜி தீவுகளில் படமாக்கப்பட்ட காட்சிகளில் நிவேதா டூ பீஸ் பிகினி உடையில் நடித்ததோடு மட்டுமல்லாமல் கயல் சந்திரனுடன் லிப்லாக் காட்சிகளில் கூட நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடல் ஒன்று நாளை வெளியாக உள்ளது. படம் தான் வர மாட்டேங்குது பாட்டாவது கேப்போம் என்று நிவேதா கடுப்பில் உள்ளாராம். 



Find Out More:

Related Articles: