தெலுங்குக்கு போவாரா சூர்யா

SIBY HERALD
நடிகர் வெங்கடேஷ் இப்பொழுது இப்பொழுது வருண் தேஜுடன் இனைந்து எப் டூ என்ற படத்தில் நடித்து வருகிறார். மகேஷ் பாபுவுடன் நடித்த சேதம்மா வாகிட்லோ சிறிமல்லே செட்டு மற்றும் பவன் கல்யாணுடன் நடித்த கோபால கோபால படங்களை தொடர்ந்து பல படங்களில் மல்டி ஸ்டாரர் படங்களாக நடித்து கொண்டுள்ளார்.



அடுத்ததாக நாக சைதன்யாவுடன் வெங்கய மாமா படத்தில் நடிக்க உள்ளார் வெங்கடேஷ். இந்நிலையில் இப்பொழுது ஒரு புதிய செய்தி வந்துள்ளது. சினிமா சூபிஸ்தா மாவா மற்றும் நேனு லோக்கல் படங்களை இயக்கிய திரிநாத ராவ் நக்கினா இயக்கத்தில் வெங்கடேஷ் அடுத்ததாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.



இதில் சுவாரசியம் என்ன என்றால் இந்த படத்தின் இயக்குனர் தமிழ் நடிகர் சூர்யாவை ஒரு சிறிய வேடத்தில் நடிக்க வைக்க அணுகியுள்ளாராம். இந்த கதாபாத்திரம் படத்தில் இருப்பது நிமிடங்கள் வரும் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னர் பல ஆண்டுகளுக்கு முன்னர் சூர்யா நடித்த காக்க காக்க படத்தின் தெலுங்கு ரீமேக்கான கர்ஷணாவில் வெங்கடேஷ் நடித்தது குறிப்பிடத்தக்கது. 


Find Out More:

Related Articles: