தள்ளி போன சாயிஷா படம்

SIBY HERALD
நடிகை சாயிஷா சென்ற ஆண்டு வெளியான வனமகன் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகம் ஆனார். ஏ. எல். விஜய் இயக்கி ஜெயம் ரவி நடித்த இந்த படம் படு தோல்வியை அடைந்தது என்றாலும் கூட படத்தின் நாயகி சாயிஷா தனது கவர்ச்சியால் நடந்தாலும் கவனம் ஈர்த்தார். இதனை தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதில் முதல் படமான கடைக்குட்டி சிங்கம் சென்ற வாரம் வெளியானது.



கார்த்தி நடித்த இந்த படம் தமிழ் படத்திடம் தோற்றதோடு மட்டுமல்லாமல் சாயிஷாவும் கிராமத்து பெண்ணாக பொருந்தவே இல்லை என்று விமர்சனங்களை பெற்றார். இந்நிலையில் அடுத்த வாரம் இவர் நடிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ஜூங்கா மற்றும் ஆர்யா நடிக்கும் கஜினிகாந்த் என ஜுலை இருபத்தி ஏழாம் தேதி சாயிஷாவின் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாவதாக இருந்தது.



ஆனால் தற்பொழுது அதே நாளில் த்ரிஷாவின் மோஹினி படமும் வெளியாக உள்ளதால் கஜினிகாந்த் படம் ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டு ஆகஸ்டு மூன்றாம் தேதி வெளியாவதாக அறிவிக்க பட்டுள்ளது. இந்த படத்தை இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கியுள்ளதால் சாயிஷாவின் கவர்ச்சி விருந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Find Out More:

Related Articles: