சிம்புவுடன் சேரும் ஜெய்!

SIBY HERALD
நடிகர் ஜெய் கடைசியாக ஜருகண்டி என்ற படத்தில் நடித்தார். அதனை அடுத்ததாக நீயா 2  என்ற பாம்பு சம்பந்தப்பட்ட படத்தில் கவர்ச்சி நாயகிகள் கேத்ரீன் ட்ரீஸா, லட்சுமி ராய் மற்றும் வரலக்ஷ்மி சரத்குமாருடன் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக இவர் ஒரு படத்தில் இரண்டாம் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார்.



அந்த படம் வேறு எதுவும் இல்லை, சிம்பு நடிக்கவிருக்கும் மாநாடு தான். வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தில் தான் ஜெய் நடிக்கவுள்ளார்.



ஏற்கனவே சிம்புவும் ஜெய்யும் வேட்டை மன்னன் படத்தில் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்டது. மேலும் ஜெய் சிம்பு நடித்த வாலு மற்றும் இது நம்ம ஆளு படங்களில் கெஸ்ட் ரோல்களில் தலைகாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.    


Find Out More:

Related Articles: