அஜீத் ஒரு சூப்பர் ஸ்டார் - திரிஷா

frame அஜீத் ஒரு சூப்பர் ஸ்டார் - திரிஷா

SIBY HERALD
ஜித் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவர் ஒரு சூப்பர் ஸ்டார். அவர் நேர்கொண்ட பார்வை மாதிரியான படத்தில் நடித்தது மிகவும் பாராட்டுக்குரியது என்று நடிகை திரிஷா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா, யுனிசெஃப்பின் தூதுவராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடைபெற்ற 'குழந்தைகளுக்கு எதிரான வன்முறை' குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட திரிஷா மாணவிகளுடன் கலந்துரையாடினார்.  சினிமாவை நிஜ வாழ்க்கையாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
Image result for அஜீத் ஒரு சூப்பர் ஸ்டார் - திரிஷா


பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான சட்டத்தை கொண்டு தண்டிக்க வேண்டும், அரபு நாடுகளில் இருக்கும் உடனடி கடுமையான தண்டனையை போல இங்கேயும் கொண்டு வரவேண்டும். பெண்கள் தன்னம்பிக்கையுடன் தங்கள் லட்சியத்திற்காக போரடினால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்றார். 2014 முதல் 2016 ஆம் ஆண்டு வரை பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்குகள் பல ஆயிரம் பதிவாகியுள்ளது. தேசிய குற்றப்பிரிவு ஆவண புள்ளிவிபரத்தின் படி 2014ஆம் ஆண்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் சுமார் 9000 , 2015 ஆம் ஆண்டில் இது 15000 வழக்குகள் , 2016ஆம் ஆண்டில் அது 36000 வழக்குகளாக இருமடங்காகிவிட்டது .



அஜீத்தின் நேர் கொண்ட பார்வை படம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதுதான். அதைப்பற்றி பேசிய திரிஷா, நான் வெளிநாட்டில் இருந்ததால் நேர்கொண்ட பார்வை படத்தை பார்க்க முடியவில்லை. அஜித் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவர் ஒரு சூப்பர் ஸ்டார். அவர் நேர்கொண்ட பார்வை மாதிரியான படத்தில் நடித்தது மிகவும் பாராட்டுக்குரியது என்றும் கூறினார்.


Find Out More:

Related Articles: