சூர்யா படத்தில் இரட்டையர்கள்!

சூர்யாவின் என்.ஜி.கே திரைப்படம் வெளியான நிலையில் அவர் நடித்த காப்பான் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் சூர்யா தற்போது இறுதிச்சுற்று சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார்.


இந்த படத்தில் சூர்யா ஜோடியாக சர்வம் தாளமயம் நாயகி அபர்ணா பாலமுரளி நடித்து வருகிறார்.



படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் காதலில் சொதப்புவது எப்படி?,வாயை மூடி பேசவும் போன்ற படங்களில் நடித்த அர்ஜூனனின் இரட்டைக் குழந்தைகள் இலன் மற்றும் இயல் இணைந்துள்ளனர்.


Find Out More:

Related Articles: