
ஜிவி பிரகாஷ் நடித்து வரும் ஆயிரம் ஜென்மங்கள்

ஜிவி பிரகாஷ் நடித்து முடித்து 100% காதல், அடங்காதே, ஜெயில் திரைப்படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது.இந்நிலையில் இயக்குனர் எழில் இயக்கி வரும் படத்தில் ஜிவி பிரகாஷ் நடித்து வருகிறார்.
படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வரும் கனல் கண்ணன் படத்தின் டைட்டில் ஆயிரம் ஜென்மங்கள் என்று சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். விரைவில் இந்த டைட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.