ஹன்சிகா படத்தில் பிக்பாஸ் பிரபலம்!

SIBY HERALD
ஹன்சிகா 50வது படமான மஹா  படப்பிடிப்பு  நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக, அவரது  காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக   செய்திகளை  பார்த்தோம். இந்நிலையில்  படத்தில் சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்கும்  பாடல் காட்சி இருப்பதாக தற்போது தகவல்  வந்துள்ளது,



இந்த பாடல் காட்சிக்கு  நடன இயக்குனரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான காயத்ரி ரகுராம் பயிற்சி அமைக்கவுள்ளார். சிம்பு குழந்தை நட்சத்திரமாக இருந்த போதே  காயத்ரி ரகுராம் நடனப் பயிற்சி அளித்துள்ளார். 



ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் மஹா படத்தை ஜமீல் இயக்கி வருகிறார். ஜிப்ரான் இசையில்  மஹா படம் உருவாகி வருகிறது.


Find Out More:

Related Articles: