
கோமாளி ஆகும் ஜெயம் ரவி!

இந்த டைட்டில் போஸ்டரை ஜெயம் ரவி சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஜெயம் ரவி, காஜல் அகர்வால் முதல்முறையாக இணையும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரெங்கநாதன் இயக்கியுள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்,

ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை எல்.கே.ஜி படத்தை தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. சம்யூக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகிபாபு, ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.