ஆக்ஷனில் இறங்கிய சேதுபதி!

SIBY HERALD

நடிகர் விஜய் சேதுபதி கடைசியாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படமான பேட்ட படத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டாரின் வில்லனாக ஜித்து என்ற வேடத்தில் நடித்திருந்தார். என்னதான் டம்மி வேடம் என்றாலும் கூட சூப்பர்ஸ்டாருடன் நடிக்க வேண்டும் என்ற இவரது கனவு பலித்தது.



சென்ற ஆண்டு தான் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என பல நடிகர்களும் வைத்திருக்கும் கனவும் செக்க சிவந்த வானம் படத்தின் மூலமாக இவருக்கு பலித்தது.




அடுத்ததாக சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை ஷில்பாவாக நடித்து வெளியீடை எதிர்பார்த்து காத்திருக்கையில் வெளியாகியுள்ளது சிந்துபாத் டீசர், படத்தின் டீஸரிலேயே தெரிகிறது அதிரடி ஆக்ஷனில் இறங்கி செய்துள்ளார்கள் என்று. தன் மனைவி மற்றும் மகனை மலேஷியாவில் ஒரு ஆபத்தில் இருந்து எப்படி மீட்கிறார் என்பதே சிந்துபாத் படத்தின் கதையாகும். விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். 

Find Out More:

Related Articles: