தலயுடன் சேர்ந்த ஷ்ரத்தா!

SIBY HERALD
தல அஜித் விஸ்வாசம் என்ற மாபெரும் பிளாக்பஸ்டர் படத்தை இப்பொழுது தான் கொடுத்தார். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஜோடியாக நடிக்க சிவாவின் இயக்கத்தில் வெளியான இந்த படம் பேட்ட படத்தை முறியடித்து வசூல் சாதனை புரிந்து வருகிறது.



இந்நிலையில் அஜித் அடுத்ததாக பிங்க் படத்தின் ரீமேக்கை எடுத்து நடிக்க உள்ளார். இந்த படத்தை தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் சதுரங்க வேட்டை படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்க இதில் யாஞ்சி புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க உள்ளார்.



மேலும் வித்யா பாலன், அபிராமி,ஆண்ட்ரியா தரியாங், ஆதிக் ரவிச்சந்திரன், மற்றும் பலர் நடிக்க யுவன் ஷங்கர் ராஜ இசையமைக்க உள்ளார். தல நடிக்கும் பிங்க் ரீமேக் மே ஒன்றாம் தேதி வெளியாக உள்ளது.


Find Out More:

Related Articles: