உயிர் தப்பிய தேவரகொண்டா!

SIBY HERALD
நடிகர் விஜய் தேவரகொண்டா தான் இன்றைய நிலையில் தெலுங்கு திரை உலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர், பல இளம் பெண்களின் கனவு நாயகன், ப்ரொட்யூசர்கள் படையெடுத்து நிற்கின்றனர் இவரை வைத்து படமெடுக்க. இத்தனைக்கும் சென்ற ஆண்டு வரை  பெல்லிசூப்புலு மற்றும் அர்ஜுன் ரெட்டி என்ற இரண்டே ஹிட் படங்கள் தான், இந்த ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் மற்றும் சமீபத்தில் வெளியான டாக்சிவாலா படங்கள் அவரை உச்சாணி கொம்பில் ஏற்றி வைத்து விட்டன.



இந்நிலையில் விஜய் தேவரகொண்டா மீண்டும் தனது கீதா கோவிந்தம் நாயகி ராஷ்மிக்கா மந்தனாவுடன் இணைந்து டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.



சமீபத்தில் இதன் படப்பிடிப்பின் போது ஓடி வந்து ரயிலில் ஏறும் காட்சி படமாக்க பட்டது. ஓடும் ரயிலில் ஏற முற்பட்ட விஜய் தேவரகொண்டா தடுமாறி விழ, தற்செயலாக இதனை கவனித்த படக்குழுவினர் அவரை தாங்கி பிடித்து அவரது உயிரை காப்பாற்றவே, சிறிய காயங்களோடு தப்பினார் தேவரகொண்டா. 


Find Out More:

Related Articles: