
மாலிக் ஆன சசிகுமார்!
இந்த படத்தில் இவரது ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கவுள்ளார். இது தவிர, சூப்பர்ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான இவருக்கு அவருடனேயே சேர்ந்து நடிக்கும் வாய்ப்பும் கார்த்திக் சுப்பாராஜின் பேட்ட படத்தில் அமைந்தது. இதில் இவரது கேரக்டர் போஸ்டர் நேற்று வெளியானது.

சசிகுமார் இதில் மாலிக் என்ற வேடத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மாளவிகா மோஹனன் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஷாவில் மாணிக் என்ற நண்பனின் மரணம் தான் ரஜினியை பாஷாவாக மாற்றும், அது போல தான் இதில் மாலிக் என்ற நண்பன் வேடம் என்று கூறப்படுகிறது.