ரஞ்சித்தின் அடுத்த குண்டு!

SIBY HERALD
அட்டகத்தி, மெட்ராஸ் படங்களில் அறிமுகம் ஆகி வெற்றி கண்டு பின்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி காலா படங்களை இயக்கி முன்னணி இயக்குனர் ஆனவர் பா. ரஞ்சித். அடுத்ததாக ஹிந்தியில் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாறையும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறையும் படம் மற்றும் வெப் சீரீஸாக எடுக்க உள்ளார் பா. ரஞ்சித்.



இந்நிலையில் சமீபத்தில் இவர் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த படம் தான் பரியேறும் பெருமாள். கதிர் மற்றும் ஆனந்தி நடிக்க அறிமுக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய இந்த சாதி எதிர்ப்பு படம் சூப்பர்ஹிட் ஆனது. இதனை தொடர்ந்து அடுத்ததாக ஒரு படத்தை தயாரிக்க உள்ளார் ரஞ்சித்.



இவரது அசிஸ்டன்ட் ஆன ஆதிரை அதியன் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்திற்கு இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு என்று பெயரிட்டுள்ளனர். இதில் அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்க அறிமுக இசையமைப்பாளர் டென்மா இசை அமைக்கவுள்ளார். 


Find Out More:

Related Articles: