பாரதிராஜாவுடன் சேரும் சசிகுமார்

SIBY HERALD
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் அடுத்ததாக வரும் ஆக்டொபர் இருபத்தி ஆறாம் தேதி ஜீனியஸ் என்ற படம் வெளியாக உள்ளது. மேலும் ஏஞ்சல், சாம்பியன் என பல படங்களை எடுத்து வருகிறார். சுட்டு பிடிக்க உத்தரவு என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.



இந்நிலையில் தனது அடுத்த படத்தை இன்று அறிவித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர்கள் சசிகுமார் மற்றும் பாரதிராஜா நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு கென்னடி க்ளப் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தில் இவர்கள் தவிர சூரி மற்றும் முனீஸ்காந்த் நடிக்க உள்ளனர்.



மேலும் இவர்கள் தவிர மீனாக்ஷி, காயத்ரி, சவுமியா மற்றும் நீத்து என புதுமுகங்கள் நடிக்க உள்ளனர். இந்த படம் பெண்கள் கபடி அணியை மையமாக வைத்து உருவாக உள்ளது.சுசீந்திரன் இயக்கத்தில் முதலில் வெளியான படமான வெண்ணிலா கபடி குழு படமும் காவடியை மையமாக வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. டி.இமான் இசையமைக்கும் கென்னடி க்ளப் அடுத்த சம்மரில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 


Find Out More:

Related Articles: