டிவிக்கு வரும் ஸ்ருதி!
கமலுடன் நடிக்கும் சபாஷ் நாயுடு படமும் எப்பொழுது ஆரம்பிக்கும் என்று தெரியவில்லை. ஆனால் ஸ்ருதியோ ஜாலியாக தனது காதலர் மைக்கேல் கார்செலுடன் உல்லாசமாக லண்டன் மும்பை என ஊர் சுற்றி வருகிறார். சமீபத்தில் தனது காதலருடன் மிக நெருக்கமாக கவர்ச்சியாக செக்சியான உடை அணிந்தபடி புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டா கிராம் அக்கவுண்டில் பதிவேற்றி வருகிறார்.
இந்நிலையில் நடிகர் விஷால் பாதையில் ஸ்ருதியும் வர உள்ளார். விஷால் சன் டிவியில் நாம் ஒருவர் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதே போல ஸ்ருதி ஹாசனும் சன் டிவியில் ஹலோ சகோ என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளார். இந்த நிகழ்ச்சி தெலுங்கில் நடிகர் ராணா டாகுபாடி நடத்தி வரும் நம்பர் ஒன யாரோ நிகழ்ச்சியின் தமிழ் வடிவம் ஆகும். வாரா வாரம் இரண்டு சிறப்பு விருந்தினர்கள் வந்து தங்கள் நட்பை பற்றி பேச அவர்களுடன் ஸ்ருதி உரையாடுவதே இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட் ஆகும்.