மதுரை பெண்ணாக நடிக்கும் த்ரிஷா!

SIBY HERALD
 நடிகை த்ரிஷா நீண்ட நாட்கள் கழித்து தமிழில் ஒரு ஹிட் கொடுத்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனுஷின் கொடி படத்தில் ருத்ரா என்ற வில்லியாக நடித்து கலக்கியவர் இப்பொழுது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சமீபத்திய படமான தொன்னூற்றி ஆறு படத்தில் கதாநாயகி ஜானுவாக வாழ்ந்திருக்கிறார்.



அணைத்து தரப்பினரையும் ஈர்த்து வரும் த்ரிஷாவின் இந்த பெர்பாமன்ஸ் அவர் மீது அவர் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் காதலில் விழா வைத்து கொண்டுள்ளது.



இந்நிலையில் அடுத்ததாக த்ரிஷா முதல் முறையாக தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்கும் படமான கார்த்திக் சுப்பாராஜின் பேட்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்பொழுது வாரணாசியில் நடைபெற்று வருகிறது. பிளாஷ்பேக்கில் ரஜினி மதுரை இளைஞராக நடிக்க அவரது காதலியாக மதுரை பெண்ணாக த்ரிஷா நடித்து வருகிறாராம். 


Find Out More:

Related Articles: