மீண்டும் இணையும் ஹிட் ஜோடி!

SIBY HERALD
இரண்டாயிரத்தி எட்டாம் ஆண்டு இசை ரசிகர்களின் காதுகளில் பாய்ந்து பட்டி தொட்டி எங்கும் ஒளித்து செம்ம ஹிட்டான குத்து பாடல் நக்க முக்க. இந்த பாடல் விஜய் ஆண்டனியின் இசையில் வெளியான படம் தான் காதலில் விழுந்தேன். பிரசாத் இசையமைப்பில் வெளியான இந்த படம் தான் தேவயானியின் தம்பியான நகுல் பாய்ஸ் படத்தை அடுத்து முதல் முதலாக எடையை குறைத்து ஹீரோவாக அறிமுகமான படம்.



இதே படம் தான் நடிகை சுனைனா நாயகியாக தமிழில் அறிமுகமான படமும் கூட. இந்த படமும் சூப்பர்ஹிட்டானது. இந்த ஹிட் படத்தை அடுத்து இதே ஜோடி மீண்டும் மாசிலாமணி படத்திலும் ஒன்றாக நடித்தனர். இந்நிலையில் காதலில் விழுந்தேன் வெளியாகி சரியாக இன்றோடு பத்து ஆண்டுகள் ஆனா நிலையில் இந்த ஹிட் ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளது.



அறிமுக இயக்குனர் சச்சின் தேவின் இயக்கத்தில் நகுல் மற்றும் சுனைனா மீண்டும் எரியும் கண்ணாடி என்ற படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளனர். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜ இசையமைக்க வைரமுத்து பாடல்கள் இயற்றவுள்ளார். பார்க்கலாம் ஹிட் ஜோடி மீண்டும் இனைந்து காம்பேக் ஹிட் கொடுப்பார்களா என்று. 


Find Out More:

Related Articles: