ஆஸ்காருக்கு செல்லும் கோகிலா!

SIBY HERALD
நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படம் கோலமாவு கோகிலா. அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா தனது தாயை காப்பாற்ற போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ஒரு பெண்ணாக நடித்திருந்தார்.



இவரது தாயாக சரண்யா பொன்வண்ணன் நடிக்க காமெடி நடிகர் யோகி பாபு தன காமெடியால் படத்தை கலகலப்பாக்கினார். இந்த படத்தின் வெற்றி நயன்தாரா தான் லேடி சூப்பர்ஸ்டார் என்று மீண்டும் ஒரு முறை அழுத்தமாக பதிவு செய்தது.



இந்நிலையில் இப்பொது அடுத்த ஆண்டின் ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் தேர்வா அனுப்பப்படும் படங்களில் தமிழ் மொழியில் இருந்து கோலமாவு கோகிலா லிஸ்டில் உள்ளது. பார்க்கலாம் கோலமாவு கோகிலா ஆஸ்கார் வரை போகுமா என்று. 


Find Out More:

Related Articles: