ஜெயலலிதா ஆகா மாறுவது யார்?

frame ஜெயலலிதா ஆகா மாறுவது யார்?

SIBY HERALD
முன்னாள் தமிழக முதல்வர் மற்றும் முன்னாள் தமிழ் சினிமா கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் ஜெயலலிதா. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் உடல்நல குறைவால் மரணமடைந்தார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் அவரது பயோபிக்கை படமாக்க பலரும் முயன்று வருகின்றனர்.

Related image


ஏற்கனவே இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை படம் விஷ்ணு இந்தூரியின் தயாரிப்பில் அடுத்த ஆண்டு துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் முன்னணி தமிழ் கிராமத்து இயக்குனர் பாரதிராஜாவும் தானும் ஒரு ஜெயலலிதா பயோபிக்கை ஆதித்திய பரத்வாஜ் தாயாரிப்பில் இயக்க உள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மூன்றாவதாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா பயோபிக்கின் பெயர் அறிவிக்கப்பட்டது. தி அயன் லேடி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் மலையாள நடிகை நித்யா மேனன் ஜெயலலிதா ஆகவும் வரலக்ஷ்மி சரத்குமார் சசிகலா ஆகவும் நடிக்க உள்ளதாக பேசப்படுகிறது. 


Find Out More:

Related Articles:

Unable to Load More