பல நாள் கழித்து வரும் அமலா படம்!

frame பல நாள் கழித்து வரும் அமலா படம்!

SIBY HERALD
நடிகை அமலா பால் சில நாட்களுக்கு முன்னர் தான் ஒரு பரபரப்பை கிளப்பினார். தனது அடுத்த படமான ரத்னா குமார் இயக்கத்தில் வர உள்ள ஆடை படத்தின் பர்ஸ்ட் ளுள் போஸ்டரில் கிட்டத்தட்ட ஆடையே இல்லாமல் டிஸ்யூ பேப்பரை மட்டுமே உள்ளாடை போல அணிந்து ஒரு படு கவர்ச்சி அவதாரத்தில் சூட்டையும் சர்ச்சையையும் கிளப்பினார்.



இந்நிலையில் அவரது பல ஆண்டு கிடப்பில் கிடந்த படம் ஒன்று வெளியாக உள்ளது. கடைசியாக திருட்டு பயலே டூ படத்தில் ஹிட்டடித்த அமலா பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற தோல்வி படத்தில் நடித்தார். இப்பொழுது அவரது நீண்ட நாள் தள்ளிப்போன படமான ராட்சசன் வெளியாக உள்ளது.



முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த இந்த படம் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக மேக்கிங்கில் உள்ளது. இப்பொழுது கடைசியாக நாளை டீசர் வெளியாக உள்ளது. அமலா பாலின் இந்த படம் ஆக்டொபர் மாதத்தில் வெளியாகும் என்று கூராடுகிறது. பார்க்கலாம் கவர்ச்சி கன்னி அமலா பால் மீண்டும் ஒரு காம்பேக் ஹிட் கொடுப்பாரா என்று.


Find Out More:

Related Articles: