மீனவ பெண்ணாகும் தாசில்தார்!

SIBY HERALD
சீரியல் நடிகை வாணி போஜன் சன் டிவி சீரியலான தெய்வமகள் சீரியலின் மூலமாக பிரபலமானார். இந்த சீரியலில் சத்யா என்ற நேர்மையான ஒரு தாசில்தார் ஆக நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலமாக அவர் தமிழ் குடும்பங்களின் செல்ல பிள்ளை ஆனார்.



இந்நிலையில் வாணி போஜன் அடுத்ததாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்க உள்ளார். என் நான்கு என்ற படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக அறிமுகம் ஆக உள்ளார்.



இந்த படத்தை அறிமுக இயக்குனர் லோகேஷ் குமார் இயக்கி வருகிறார். வாணி போஜன் இந்த படத்தில் ஒரு மீனவ பெண்ணாக நடித்துள்ளார். இதில் வாணி போஜன் ஜோடியாக மெட்றாஸ் புகழ் கலையரசன் நடித்துள்ளார். 


Find Out More:

Related Articles: