
காற்றின் மொழியை கழுவி ஊதும் நெட்டிசன்ஸ்

இந்நிலையில் ஜோதிகாவின் கணவர் நடிகர் சூர்யா காற்றின் மொழி படத்தின் பர்ஸ்ட் லுக்கை இன்று வெளியிட்டார். இந்த போஸ்டரில் ஜோதிகா பெண்களுக்கான பாத்து கட்டளைகள் என்று கூறும் இரண்டு பலகைகளை பிடித்த வண்ணம் இருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அனைவரும் இந்த பட குழுவினரையும் ஜோதிகாவையும் கழுவி ஊற்றாத குறையாக கலாய்த்து வருகின்றனர்.

இந்த படம் ஹிந்தியில் வித்யா பாலன் நடித்த ஹிட் படமான துமாரி சுலு என்ற படத்தின் ரீமேக்காகும். இந்த படம் ஒரு இதமான புன்னகையை வரவழைக்க கூடிய ஒரு நல்ல படமாக இருக்கும் பட்சத்தில் இந்த படத்தின் ரீமேக்கிற்கு எதற்கு இப்படி போலி பெண்ணியம் பேசும் ஒரு போஸ்டர் என்று அனைவரும் ஜோதிகாவை கிழி கிழியென கிழித்து வருகின்றனர். ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாச்சியார் படத்தின் ட்ரைலரில் கெட்ட வார்த்தை பேசியதால் ஜோதிகா சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.