வில்லியாக ஆசைப்படும் நாயகி

SIBY HERALD
நடிகை ராஷி கண்ணா தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உள்ளார். ஊஹாலு குசகுசலாடே மற்றும் தோலி பிரேமா ஆகிய வெற்றி படங்களில் நடித்தார். இப்பொழுது தமிழில் நடிக்க உள்ளார்.



நயன்தாரா மற்றும் அதர்வா நடிப்பில் வெளியாக உள்ள திரில்லர் படமான இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வா ஜோடியாக நடித்து வருகிறார்.



இதனை தொடர்ந்து சித்தார்த் ஜோடியாக சைத்தான் கே பச்சா படத்திலும் நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் நடித்து சமீபத்தில் வெளியான ஸ்ரீனிவாச கல்யாணம் படத்தின் விழாவின் போது பேசுகையில் தான் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் வில்லி வேடத்திலும் நடிக்க விரும்புவதாக தனது ஆசையை வெளியிட்டார். 


Find Out More:

Related Articles: