முதல்வர் முதல் முதலாளி வரை!

frame முதல்வர் முதல் முதலாளி வரை!

SIBY HERALD
தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு சமீபத்தில் பரத் அனே நேனு படத்தில் நடித்திருந்தனர் பிளாக்பஸ்ட்டர் படமாக ஆன இந்த படத்தை கொரட்டால சிவா இயக்கி இருந்தார். இந்த படத்தில் மகேஷ் பாபு ஆந்திர மாநிலத்தின் முதல் அமைச்சராக நடித்திருந்தனர். ஸ்பைடர் படத்தின் படு தோல்விக்கு பிறகு இந்த படம் இவருக்கு பெரிய ஆறுதலாக அமைந்தது. இப்பொழுது மகேஷ் பாபு தனது மிக முக்கியமான படமான தனது இருபத்தி ஐந்தாவது படத்தில் நடித்து வருகிடுறார்.

Image result for #mahesh25


இந்த படத்தை தோழா படத்தை இயக்கிய வம்ஷி பைடிபல்லி இயக்குகிறார். தில் ராஜு மற்றும் அஸ்வினி தத் தயாரிக்கும் இந்த பெருமைமிகு படம் சென்ற மாதம் முதல் டேராடூனில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முதல் முறையாக மகேஷ் பாபு மேசை மற்றும் தாடியுடன் நடிக்க உள்ளார்.

Related image


அவர் காலேஜ் ஸ்டூடண்டாக நடிப்பதாகவும் அவர் ஒரு எம்.பி.ஏ பட்டதாரியாக நடிக்க உள்ளதாகவும் செய்திகள் பரவின. ஆனால் இப்பொழுது தான் அந்த கல்லூரி காட்சிகள் வெறும் பிளாஷ்பேக் மட்டுமே என்றும் படத்தில் முழுவதும் மகேஷ் பாபு ஒரு அமெரிக்க கம்பெனியின் முதலாளியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி உகாதி திருநாள் சிறப்பு விருந்தாக வெளியாக உள்ளது. 


Find Out More:

Related Articles: