பல நாட்களுக்கு பின் வெற்றி பெற்ற நந்திதா!

SIBY HERALD
நடிகை நந்திதா தமிழில் அட்டகத்தி படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவ கார்த்திகேயனின் எதிர் நீச்சல் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். அந்த வேடத்தில் நடித்ததற்காக பாராட்டுகள் பெற்ற நந்திதா அடுத்ததாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ஜோடியாக இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதா என்ற கலகலப்பான கதாபாத்திரத்தில் நடித்து இன்னும் அழுத்தமாக தனது முத்திரையை பதித்தார்.



ஆனால் இதற்கு பின்னர் இவர் நடித்த படங்களான உள்குத்து, புலி ,மற்றும் பல படங்கள் தோல்வி அடையவே தெலுங்கிற்கு சென்றார் நந்திதா. தெலுங்கில் இவர் அறிமுகமான படமான இக்கடிக்கி போத்தாவு சின்னவாடா படம் வெற்றி பெறவே இப்பொழுது அங்கு ஸ்ரீனிவாச கல்யாணம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.



ஆனால் தமிழில் வெற்றி பெறவில்லையே என்று வருத்தத்தில் இருந்தவருக்கு ஆறுதலாக வந்துள்ளது இன்று வெளியாகியுள்ள அசுரவாதம் படம். நடிகர் சசிகுமார் ஜோடியாக நந்திதா நடித்துள்ள இந்த படம் சிறப்பான விமர்சனங்களை பெற்று வெற்றி நடை போட்டு வருகிறது. இதனால் தனக்கு நீண்ட நாட்கள் கழித்து தமிழில் ஒரு ஹிட் அடித்துள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளார் நந்திதா. 


Find Out More:

Related Articles: