தனுஷுடன் சேரும் சசிகுமார்!

SIBY HERALD
இயக்குனர் மற்றும் நடிகர் இயக்குநர் சுப்ரமணியபுரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து முழு நேர நடிகர் ஆனார். நாடோடிகள் மற்றும் போராளி படங்கள் நன்றாக ஓடவே தான் ஒரு கதாநாயகனாக நிலைநாட்டி விட்டதாக எண்ணினார். ஆனால் அந்த படங்களை அடுத்து அவர் நடித்த படங்களான தாரை தப்பட்டை, வெற்றிவேல், கிடாரி, பலே வெள்ளைய தேவா ஆகிய படங்கள் படு தோல்வியை தழுவின.



இந்த படங்களை அடுத்து அவர் அடுத்ததாக நடித்த படமான அசுரவதம் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. இந்த படத்தை அடுத்து அவர் தனது சூப்பர்ஹிட் படமான நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரை பற்றிய ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.



அது என்னவென்றால் சசிகுமார் இயக்குனர் கவுதம் மேனனின் அடுத்த படமான என்னை நோக்கி பாயும் தோட்டா  படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளாராம். இந்த படத்தில் நடிகர் தனுஷின் அண்ணனாக சசிகுமார் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேகா ஆகாஷ் தனுஷின் ஜோடியாக நடித்துள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. 


Find Out More:

Related Articles: