மீண்டும் பிளாப் நாயகனுடன் காஜல்

SIBY HERALD
நடிகை காஜல் அகர்வால் சமீப காலமாக தனது படங்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் நடித்த ஆவ் படம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆனால் அந்த படத்தை தொடர்ந்து அவர் பிளாப் ஹீரோவான கல்யாண் ராமின் நடிப்பில் வெளிவந்த படமான எம்.எல்.ஏ படத்தில் நடித்தார் காஜல்.



அந்த படம் படு தோல்வியை தழுவியது. இந்நிலையில் அஜித் சூர்யா போன்ற பெரிய கதாநாயகர்களுடன் மட்டுமே நடிப்பார் என்று எதிர்பார்க்க பட்ட காஜல் சிறிய ஹீரோக்களுடன் கூட நடிக்க தொடங்கினார். அந்த வகையில் எங்கேயும் எப்போதும் புகழ் ஷர்வானந்தின் புதிய படத்தில் ஒப்பந்தமானார் காஜல்.



இது தவிர தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷின் மகனான சாய் ஸ்ரீனிவாஸ் ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டார் காஜல். இப்பொழுது அடுத்த அதிர்ச்சியாக அதே சாய் ஸ்ரீனிவாஸ் ஜோடியாக மீண்டும் இன்னொரு படத்திலும் நடிக்க காஜல் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை காஜலை சினிமாவில் லட்சுமி கல்யாணம் படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய தேஜா இயக்குகிறார். 


Find Out More:

Related Articles: